Advertisement

எனது 45 வருட நண்பர்களை இழந்துவிட்டேன் - ஜேம்ஸ்பாண்ட் நாயகன் வருத்தம்

By: Monisha Tue, 16 June 2020 3:44:21 PM

எனது 45 வருட நண்பர்களை இழந்துவிட்டேன் - ஜேம்ஸ்பாண்ட் நாயகன் வருத்தம்

ஹாலிவுட் படங்களில் ஜேம்ஸ்பாண்ட் படத்திற்கு எப்போதுமே உலகம் முழுவதும் அதிக வரவேற்பு உள்ளது. ஜேம்ஸ்பாண்ட் நாயகனாக நடித்துப் பிரபலமானவர் நடிகர் பியர்ஸ் ப்ராஸ்னன். அவர் தனது நண்பர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தது குறித்து சமீபத்தில் ஒரு பத்திரிகையில் கூறியதாவது:-

கொரோனா வைரஸ் தொற்றால் எனது இரண்டு நண்பர்கள் இறந்துவிட்டனர். அவர்கள் கடந்த 45 வருடங்களாக என் நண்பர்கள். அதில் ஒருவரின் மகனுக்கு நான் காட்ஃபாதராக இருக்கிறேன். நீங்கள் எங்கு இருந்தாலும், அங்கு நிலை எவ்வளவு அழகாக இருந்தாலும் உங்களைச் சுற்றி இந்த மோசமான அச்சுறுத்தல் இருக்கிறது.

hollywood,jamesband,actor pierce brosnan,corona virus ,ஹாலிவுட்,ஜேம்ஸ்பாண்ட்,நடிகர் பியர்ஸ் ப்ராஸ்னன்,கொரோனா வைரஸ்

தொடர்ந்து நாம் முயன்று கொண்டே இருக்க வேண்டும். வாழ்க்கையில் ஈடுபாட்டுடன் இருக்க வேண்டும். நாம் போரில் இருக்கிறோம். மக்கள் இறந்து கொண்டிருக்கின்றனர். இதெல்லாம் முடிந்து சகஜ நிலை திரும்பும்போது, நமது நிச்சயமற்ற பூமியைப் பற்றிப் புரிந்த பிறகு, நம்மிடையே கனிவும், விழிப்புணர்வும் இன்னும் அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன்" என்று பியர்ஸ் ப்ராஸ்னன் வருத்தத்துடன் கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று பரவுகிறது என்று தெரிந்தவுடன் நடிகர் பியர்ஸ் ப்ராஸ்னன் உடனடியாக ஹவாயில் இருக்கும் தனது வீட்டிற்கு திரும்பிவிட்டார்.

Tags :