Advertisement

நடிகர் பிரபாஷின் ஆதிபுருஷ் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னை

By: Nagaraj Tue, 04 Oct 2022 9:02:04 PM

நடிகர் பிரபாஷின் ஆதிபுருஷ் படத்திற்கு ஏற்பட்டுள்ள பிரச்னை

ஐதராபாத்:பாகுபலி படத்தின் மூலம் பிரபலமான தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் தற்போது ஓம் ராவத் இயக்கத்தில் ‘ஆதிபுருஷ்’ படத்தில் நடித்து வருகிறார். ராமாயணத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தில் பிரபாஸ் ராமனாக நடிக்கிறார்.

இப்படத்தின் போஸ்டர் மற்றும் டிரைலரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இது குறித்து மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோத்தம் மிஸ்ரா கூறுகையில், “ஆதிபுருஷ் டிரெய்லரை பார்த்தேன். அதில் ஆட்சேபகரமான காட்சிகள் உள்ளன.

aadipurush,baahubali,film,prabhas,trailer ,ஆதிபுருஷ், தெலுங்கு, படக்குழு, பிரபாஸ், ராமன்

டிரெய்லரில் ஹனுமான் தோல் உடையணிந்துள்ளார். டிரெய்லரில் காணப்படும் இந்து தெய்வங்களின் உடைகள் மற்றும் தோற்றம் ஏற்கத்தக்கது அல்ல. இவை. மத உணர்வுகளை புண்படுத்தும் காட்சிகள், இது போன்ற காட்சிகளை படத்திலிருந்து நீக்க வேண்டும்” என்றார்.


“ஓம் ராவுத்துக்கு கடிதம் எழுதியுள்ளேன். தவறான முறையில் இந்து சின்னங்களை காட்டும் காட்சிகளை நீக்காவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என எச்சரித்துள்ளார். லீலா மணிமேகலையின் காளி படத்தின் போஸ்டர் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்ய காவல்துறைக்கு அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது ஆதிபுருஷ்க்கும் இதே பிரச்சனை தான்.

Tags :
|