Advertisement

நடிகர் பிரபாஸ் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!

By: Monisha Mon, 20 July 2020 11:18:18 AM

நடிகர் பிரபாஸ் ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் 'கோச்சடையான்' திரைப்படத்தில் நடித்த பாலிவுட்டின் முன்னணி நடிகை தீபிகா படுகோனே தற்போது பிரபல தென்னிந்திய நடிகருக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக தகவல் வெளியாகியுள்ளது.

பாகுபலி மற்றும் பாகுபலி 2 ஆகிய இரண்டு திரைப்படங்கள் மூலம் உலகப் புகழ்பெற்ற நடிகர் பிரபாஸ் நடிக்கவுள்ள அடுத்த படத்தின் டைட்டில் 'ராதே ஷ்யாம்'. இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என 4 மொழிகளில் தயாராகவுள்ளது. இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்தது.

actor prabhas,actress deepika padukone,prabhas 21,telugu ,நடிகர் பிரபாஸ்,நடிகை தீபிகா படுகோனே,பிரபாஸ் 21,தெலுங்கு

இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கவுள்ள 'பிரபாஸ் 21' படத்தை நடிகையர் திலகம் இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கவுள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த படத்தை வைஜெயந்தி மூவீஸ் தயாரிக்கவுள்ளது என்பதும் இந்நிறுவனம் தயாரிக்கும் 50வது படம் இது.

இந்த நிலையில் இந்த படத்தில் பிரபாஸ் ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை தீபிகா படுகோனே நடிக்கவுள்ளதாக சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் தெலுங்கு திரையுலகமே ஆச்சரியத்தில் மூழ்கியுள்ளது.

Tags :