Advertisement

அழகான பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் பிரபுதேவா

By: Nagaraj Sun, 11 June 2023 11:20:14 PM

அழகான பெண் குழந்தைக்கு தந்தையான நடிகர் பிரபுதேவா

சென்னை: நடிகர் பிரபுதேவா பெண் குழந்தைக்கு தந்தையாகி உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் பிரபுதேவா கடந்த 1995-ம் ஆண்டு ரம்லத்தை திருமணம் செய்தார். பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக 2011-ம் ஆண்டு அவரை விவாகரத்து செய்தார். 2019 ஆம் ஆண்டில், முதுகுவலி காரணமாக மும்பையில் உள்ள மருத்துவமனையில் பிரபுதேவா சிகிச்சை பெற்றார்.

அங்கு பணிபுரியும் பிசியோதெரபிஸ்ட் ஹிமானி சிங்குடன் காதல் மலர்ந்தது. பிரபுதேவா ஹிமானி சிங்கை 2020ல் திருமணம் செய்து கொண்டார்.இந்த திருமணம் ரகசியமாக நடந்தது. நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.

child,father,prabhudeva,woman ,, குழந்தை, தந்தை, பிரபுதேவா, பெண்

பிரபுதேவா சமீபத்தில் தனது மனைவி ஹிமானியுடன் திருப்பதிக்கு சென்றார். அப்போதுதான் ஹிமானி சிங்கின் புகைப்படம் வெளியானது. தற்போது பிரபுதேவா-ஹிமானி சிங் தம்பதிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

அவருக்கு இணையதளத்தில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். பிரபுதேவா-ரம்லத்துக்கு ஏற்கனவே 2 மகன்கள் இருந்தனர். தற்போது பிரபுதேவா தனது முதல் பெண் குழந்தைக்கு தந்தையாகியுள்ளார்.

Tags :
|
|