Advertisement

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்

By: vaithegi Fri, 08 Sept 2023 3:28:06 PM

நடிகர் மாரிமுத்துவின் மறைவுக்கு நடிகர் ரஜினிகாந்த் இரங்கல்


'எதிர்நீச்சல்' புகழ் நடிகர் மாரிமுத்து இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அவருக்கு வயது 57. இயக்குனர்கள் மணிரத்தினம், வசந்த், சீமான், எஸ்.ஜே. சூர்யா ஆகியோரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி உள்ளார். பிரசன்னா நடித்த கண்ணும் கண்ணும் , விமலின் புலிவால் ஆகிய திரைப்படங்களையும் இவர் இயக்கி உள்ளார்.

இதையடுத்து சமீபத்தில் 20க்கும் மேற்பட்ட படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்து உள்ள இவர் சமீபத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

rajinikanth,actor marimuthu,condolence ,ரஜினிகாந்த் ,நடிகர் மாரிமுத்து,இரங்கல்


இச்சூழலில் நடிகர் மாரிமுத்து மறைவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்து கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது , மாரிமுத்து ஒரு அருமையான மனிதர். அவருடைய இறப்பு எனக்கு அதிர்ச்சியளிக்கிறது.

அவரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கு என்னுடைய மனமார்ந்த அஞ்சலி. என அதில் அவர் குறிப்பிட்டு உள்ளார்.

Tags :