Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த வாழ்த்து... இயக்குனர் லோகேஷ் நெகிழ்ச்சி

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த வாழ்த்து... இயக்குனர் லோகேஷ் நெகிழ்ச்சி

By: Nagaraj Wed, 11 Oct 2023 5:55:40 PM

நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்த வாழ்த்து... இயக்குனர் லோகேஷ் நெகிழ்ச்சி

சென்னை: லியோ படம் வெற்றிபெற சமீபத்தில் தன்னை ரஜினிகாந்த் வாழ்த்தியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

வரும் 19ம் தேதி பிரமாண்டமான முறையில் வெளிவரவிருக்கும் திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார்.

மாபெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் தான் வெளிவந்தது. சில சர்ச்சைகள் இதற்கு எழுந்தாலும், மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று விட்டது.

leo movie,rajinikanth,greetings,interview,vijay ,லியோ படம், ரஜினிகாந்த், வாழ்த்து, பேட்டி, விஜய்

டிரைலரை தொடர்ந்து இன்று லியோ படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகிறது. லியோ படத்தை தொடர்ந்து அடுத்ததாக ரஜினியை வைத்து தலைவர் 171 படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவுள்ளார்.

இப்படத்திற்கான பூஜை சமீபத்தில் தான் போடப்பட்டுள்ளது. இந்நிலையில், லியோ குறித்து ரஜினிகாந்தை லோகேஷ் சந்திக்க போகும் போதெல்லாம் கேட்டு கொண்டே இருப்பாராம் ரஜினி.

மேலும் லியோ படம் வெற்றிபெற சமீபத்தில் தன்னை ரஜினிகாந்த் வாழ்த்தியதாக லோகேஷ் கனகராஜ் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

Tags :