Advertisement

இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் ரஜினிகாந்த்

By: Nagaraj Thu, 31 Aug 2023 6:47:36 PM

இன்ப அதிர்ச்சி அளித்த நடிகர் ரஜினிகாந்த்

பெங்களூர்: பெங்களூரு ஜெயநகர் பஸ் டிப்போவுக்கு திடீரென ரஜினிகாந்த் விஜயம் செய்து அங்கு இருந்தவர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்தார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தனது ஆரம்ப காலத்தில் பஸ் கண்டக்டராக இருந்தார். அதன்பிறகு படங்களில் நடிக்க ஆரம்பித்து தனது நடிப்பாலும் ஸ்டைலாலும் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தார். இதையடுத்து ரசிகர்கள் ரஜினியை சூப்பர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர்.

ரஜினி படப்பிடிப்பு இல்லாத நேரத்தில் பெங்களூரில் உள்ள தனது அண்ணன் வீட்டிற்கு செல்வது வழக்கம். அப்போது தன்னுடன் பணிபுரியும் நண்பர்களின் வீட்டுக்குச் செல்வார்.

bangalore bus depot,rajinikanth made,sudden visit , திடீர் விஜயம், நடிப்பு மற்றும் ஸ்டைல், பஸ் டிப்போ

இதற்கிடையில், தான் பணியாற்றிய பெங்களூரு ஜெயநகர் பஸ் டிப்போவுக்கு திடீரென ரஜினிகாந்த் சென்றுள்ளார். அப்போது, பணிமனையில் இருந்த ஊழியர்களை சந்தித்து உரையாடினார். அவர் தனது பணியின் நினைவுகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் பேருந்து இயக்குனர் மற்றும் நடத்துனருடன் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தார். மேலும், பெங்களூரில் உள்ள ராகவேந்திர சுவாமி மடத்துக்கு ரஜினிகாந்த் வருகை தந்தது குறிப்பிடத்தக்கது.

Tags :