Advertisement

குஜராத் செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்... எதற்கு தெரியுங்களா?

By: Nagaraj Fri, 13 Oct 2023 4:25:53 PM

குஜராத் செல்கிறார் நடிகர் ரஜினிகாந்த்... எதற்கு தெரியுங்களா?

அகமதாபாத்: குஜராத் செல்லும் ரஜினி... இந்தியா-பாகிஸ்தான் இடையிலான உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்கிறார். இரு அணிகள் மோதும் ஆட்டம் அகமதாபாத்தில் நடைபெறுகிறது.

ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பையின் 13வது சீசன் இந்தியாவில் அக்டோபர் 5ஆம் தேதி தொடங்குகிறது. இதில் இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணி இதுவரை 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ளது.

actor,competition,cricket,gujarat,india,pakistan,rajinikanth ,இந்தியா, கிரிக்கெட், குஜராத், நடிகர், பாகிஸ்தான், போட்டி, ரஜினிகாந்த்

இதையடுத்து நாளை மறுநாள் அகமதாபாத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி பரம எதிரியான பாகிஸ்தான் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியை பிரமாண்டமாக நடத்த ஐசிசி மற்றும் பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த போட்டியை நேரில் காண கோல்டன் டிக்கெட் வழங்கி சச்சின் டெண்டுல்கர், நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ரஜினியின் 170வது படப்பிடிப்பு கேரளா மற்றும் நெல்லை பகுதிகளில் நடந்து வருகிறது. இந்நிலையில், அகமதாபாத்தில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் போட்டியை காண நடிகர் ரஜினிகாந்த் குஜராத் செல்கிறார்.

Tags :
|
|