Advertisement

மாமன்னன் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்

By: Nagaraj Wed, 05 July 2023 8:37:52 PM

மாமன்னன் படத்தை பாராட்டி தள்ளிய நடிகர் ரஜினிகாந்த்

சென்னை: மாமன்னன் படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள் என்று நடிகர் ரஜினிகாந்த் பாராட்டி உள்ளார்.

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டால் நடிக்கும் படம் ‘மாமன்னன்’. இதில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

actor,film crew,greetings,mamannan,rajinikanth, ,நடிகர், படக்குழு, மாமன்னன், ரஜினிகாந்த், வாழ்த்து

ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படம் கடந்த 29ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில், ‘மாமன்னன்’ படம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய டுவிட்டரில் கூறி இருப்பதாவது; “சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags :
|