Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த தேதி அமேசான் ப்ரைமில் வெளியீடு

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த தேதி அமேசான் ப்ரைமில் வெளியீடு

By: vaithegi Sat, 02 Sept 2023 1:36:20 PM

நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் இந்த தேதி அமேசான் ப்ரைமில் வெளியீடு

ஜெயிலர் திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது ... நெல்சன் இயக்கத்தில், நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர்’. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து உள்ள ஜெய்லர் படத்திற்கு அனிரூத் இசையமைத்துள்ளார். ரம்யா கிருஷ்ணன் , தமன்னா, யோகி பாபு, விநாயகன், விடிவி கணேஷ், லெடின் கிங்ஸ்லி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் நடித்து உள்ளனர்.

மேலும் அத்துடன் பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப், கன்னடா சூப்பர் ஸ்டார் சிவராஜ் குமார், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் உள்ளிட்டோரும் இப்படத்தில் நடித்திருக்கின்றனர். பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திய இப்படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் 3,500க்கும் அதிமான திரையரங்குகளில் வெளியானது.

amazon,actor rajinikanth,jailer ,அமேசான் ,நடிகர் ரஜினிகாந்த்,ஜெயிலர்


இதையடுத்து தமிழகத்தில் மட்டும் 900க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ரிலீஸானது. படம் மிகப்பெரிய் வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், ஜெயிலர் திரைப்படம் ரூ.525 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து இருப்பதாக படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் தெரிவித்துஇருக்கிறது.

இந்நிலையில் வரும் செப்டம்பர் 7ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகிறது நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம். கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்று வசூல் சாதனை படைத்த நிலையில் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

Tags :
|