Advertisement

சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

By: Nagaraj Sun, 05 July 2020 8:24:20 PM

சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டு

சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு நடிகர் ரஜினிகாந்த் பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார்.

சென்னையில் கொரோனா பாதிப்பின் தாக்கம் அதிகரித்தபடி இருக்கிறது. அதனை கட்டுப்படுத்த சித்த மருத்துவத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழக சுகாதாரத் துறை.

சித்த மருத்துவர் வீரபாபுவுக்கு சில அனுமதி தந்துள்ளது தமிழக அரசு. அதன்படி சென்னையில், சில பகுதிகளில் சித்த மருத்துவ சிகிச்சை முகாம் அமைத்து, கொரோனா பாதிப்புள்ள பலருக்கும் சிகிச்சை அளித்து வருகிறார்.

actor rajini,appreciation,siddha doctor,veera babu,corona treatment ,நடிகர் ரஜினி, பாராட்டு, சித்த மருத்துவர் வீரபாபு, கொரோனா சிகிச்சை

குறிப்பாக, பல்வேறு மூலிகளை பயன்படுத்தி சித்த மருத்துவ சிகிச்சை கொடுக்கிறார் வீரபாபு.

இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு எதிர்ப்பு சக்தி உருவாகி குணமடைந்து வருகின்றனர். இந்நிலையில் இதுகுறித்து அறிந்த நடிகர் ரஜினி, வீரபாபுவை தொடர்பு கொண்டுப் பேசியுள்ளார். அப்போது, " உங்களைப் பற்றியும் உங்களின் சித்த மருத்துவ சிகிச்சை பற்றியும் நிறைய கேள்விப்பட்டு இருக்கிறேன். மக்களுக்கு சிறப்பான சேவை செய்து வருகிறீர்கள். மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்த்துகள் " என்று தெரிவித்துள்ளார்.

Tags :