Advertisement

வெப் தொடரில் நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா

By: Nagaraj Tue, 14 Mar 2023 11:10:41 PM

வெப் தொடரில் நடித்ததற்கு மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா

ஆந்திரா: ராணா நாயுடு வெப் தொடரில் நடித்ததற்கு எழுந்த கண்டனங்கள் எழுந்ததால் நடிகர் ராணா ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் ராணா. பாகுபலியில் வில்லனாக நடித்து பிரபலமானார். தமிழில் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி, எனை நோக்கி பாயும் தோட்டா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

actors,criticized,platform,rana, ,தெலுங்கு, பாகுபலி, ராணா, விமர்சனம்

தற்போது ராணாவும் வெங்கடேசும் இணைந்து நடித்த ‘ராணா நாயுடு’ என்ற வெப் தொடர் ஓடிடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. இந்த தொடரில் அளவுக்கு மீறிய ஆபாசம் மற்றும் அருவெறுப்பான காட்சிகள் இருப்பதாகவும், குடும்பத்தோடு பார்க்க முடியவில்லை என்றும் இணையதளத்தில் ரசிகர்கள் கண்டித்து பதிவுகள் வெளியிட்டனர்.

புகழ்பெற்ற குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் இப்படி மோசமான தொடரில் நடிக்கலாமா என்றும் விமர்சித்தார்கள். இதையடுத்து ரசிகர்களிடம் ராணா மன்னிப்பு கேட்டு உள்ளார். டுவிட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். இந்த தொடரை குடும்பத்தோடு பார்க்க வேண்டாம். தனித்தனியாக பாருங்கள்’ என்று கூறியுள்ளார்.

Tags :
|
|