Advertisement

தன் உடல் நிலை குறித்து வெளிப்படையாக கூறியுள்ள நடிகர் ராணா

By: Nagaraj Tue, 24 Nov 2020 10:41:33 PM

தன் உடல் நிலை குறித்து வெளிப்படையாக கூறியுள்ள நடிகர் ராணா

தன் உடல் நிலை குறித்து நடிகை சமந்தா நடத்தும் நிகழ்ச்சியில் வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகர் ராணா.

பாகுபலி படத்தில் வில்லனாக நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ராணா. இந்நிலையில் தனது உடல்நல குறைவு பற்றி கண்ணீர்விட்டபடி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார். அவர் தெரிவித்துள்ளதாவது:

கடந்த ஆண்டு இதயத்தை சுற்றியுள்ள பகுதியில் கால்சியம் அதிகளவில் படர்ந்து இருந்தது.

actress samantha,actor rana,superhero,healthy,hard rock ,நடிகை சமந்தா, நடிகர் ராணா, சூப்பர் ஹீரோ, உடல்நிலை, கடினமான பாறை

சிறுநீரகங்கள் செயலிழந்தன. ஸ்டிரோக் ஏற்பட 70 சதவிகித வாய்ப்பும் 30 சதவிகிதம், நேரடி மரணம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக என்னிடம் சொன்னார்கள்’ என்று கூறியுள்ளார்.

நடிகை சமந்தா நடத்தும் சாம் ஜாம் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்று கொண்ட ராணா, அதில் தனது கடந்த கால உடல்நல குறைவு பற்றி கண்ணீர்விட்டபடி மேற்கண்டவாறு வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.

பின்னர் அவரை தேற்றும் விதமாக நடிகை சமந்தா, உங்களை சுற்றி ரசிகர்கள் இருக்கிறார்கள். நீங்கள் கடினமான பாறை போன்றவர். அதை நான் எனது கண்களுக்கு முன்னால் பார்த்திருக்கிறேன். அதனால்தான் எனக்கு சூப்பர் ஹீரோவாக நீங்கள் காணப்படுகிறீர்கள் என்று கூறியுள்ளார்.

Tags :