Advertisement

நடிகர் ராணாவுக்கு வரும் ஆக.8ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம்

By: Nagaraj Fri, 24 July 2020 7:50:05 PM

நடிகர் ராணாவுக்கு வரும் ஆக.8ம் தேதி ஹைதராபாத்தில் திருமணம்

வரும் 8ம் தேதி திருமணம்... ஹைதராபாத்தில் நடிகர் ராணா டகுபதி - மிஹீகா திருமணம் ஆகஸ்ட் 8 அன்று நடைபெறவுள்ளது.

ராணா டகுபதி. 2010-ல் லீடர் என்கிற தெலுங்குப் படம் மூலமாகத் திரையுலகில் அறிமுகமானார். பாகுபலி படம் தான் இவரை புகழின் உச்சத்துக்குக் கொண்டு நிறுத்தியது. ஆரம்பம், இஞ்சி இடுப்பழகி, பெங்களூர் நாட்கள், எனை நோக்கி பாயும் தோட்டா ஆகிய தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய காதலியைச் சமீபத்தில் உலகுக்கு அறிமுகப்படுத்தினார் ராணா டகுபதி. மிஹீகா பஜாஜின் புகைப்படத்தை இன்ஸ்டகிராமில் வெளியிட்டு எனக்குச் சம்மதம் சொன்னார் என ராணா குறிப்பிட்டார்.

marriage,ranadakupathi,information,august 8th ,திருமணம், ராணாடகுபதி, தகவல்கள், ஆகஸ்ட் 8ம் தேதி

ஹைதராபாத்தைச் சேர்ந்த மிஹீகா, டியூ டிராப் டிசைன் ஸ்டூடியோவின் நிறுவனர். மே 21 அன்று இரு குடும்பத்தினரும் சந்தித்து திருமணம் பற்றி விவாதித்தார்கள்.

இந்நிலையில் ஆகஸ்ட் 8 அன்று ஹைதராபாத்தில் ராணா டகுபதி - மிஹீகா திருமணம் நடைபெறவுள்ளது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக குறைந்த அளவினான நபர்களே இத்திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என்று அறியப்படுகிறது.

ஐந்து நட்சத்திர விடுதியில் திருமணம் நடைபெறும் என்று முதலில் கூறப்பட்டது. ஆனால் கரோனா காரணமாக ராணா வீட்டிலேயே திருமணம் நடைபெறவுள்ளதாகச் சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags :