Advertisement

இளைஞர்களுக்கு நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அறிவுரை

By: Nagaraj Sun, 22 Jan 2023 11:23:41 AM

இளைஞர்களுக்கு நடிகர் ஆர்.ஜே. பாலாஜி அறிவுரை

சென்னை: படம் நல்லா இருக்கா இல்லையா என்று ரிலீஸ் ஆகும் போது சொல்லுங்க. பாக்ஸ் ஆபிஸ் வசூலை படக்குழு பார்த்துக் கொள்ளும்’ என்று இளைஞர்களுக்கு ஆர்.ஜே. பாலாஜி அறிவுரை கூறியுள்ளார்.

ஆர்.ஜே.யாக பயணத்தை தொடங்கிய நடிகர் ஆர்.ஜே.பாலாஜி தற்போது முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் தமிழ் சினிமாவில் வலம் வருகிறார். முதலில் பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து எல்.கே.ஜி, மூக்குத்தி அம்மன் போன்ற வித்தியாசமான படங்களை இயக்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

பாலாஜி நடிப்பில் சமீபத்தில் வெளியான வீட்ல விஷேசம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து ஜியான் கிருஷ்ணகுமார் இயக்கத்தில் ரன் பேபி ரன் படத்தில் நடித்து வருகிறார்.

mookkutty amman,rj balaji,run baby run, ,ஆர்.ஜே.பாலாஜி, மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன்

நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தில் ராதிகா, ஸ்ம்ருதி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். பிப்ரவரி 3ஆம் தேதி படம் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் இளைஞர்களுக்கு அறிவுரை கூறிய ஆர்.ஜே.பாலாஜியின் பேட்டி வைரலாகி வருகிறது.

அதில் அவர் கூறியதாவது, சமீபத்தில் படத்தை தயாரித்த தயாரிப்பாளர்களை விட இளைஞர்கள் பாக்ஸ் ஆபிஸில் பிஸியாக உள்ளனர். சில நாட்களுக்கு முன் ஒரு உயிர் பறிபோனது. இது இளைஞர்களுக்கு தேவையில்லாத ஒன்று, அவர்களின் நேரத்தை வீணடிப்பதாகும்.

படம் நல்லா இருக்கா இல்லையா என்று ரிலீஸ் ஆகும் போது சொல்லுங்க. பாக்ஸ் ஆபிஸ் வசூலை படக்குழு பார்த்துக் கொள்ளும்’’ என்று இளைஞர்களுக்கு அறிவுரை கூறினார். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :