Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது, நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது ... நடிகை சமந்தா

சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது, நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது ... நடிகை சமந்தா

By: vaithegi Mon, 30 Jan 2023 10:31:25 AM

சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது, நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது   ... நடிகை சமந்தா

எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது .... தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையான சமந்தா சமீபத்தில் மயோசிடிஸ் என்ற தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு மீண்டும் நடிக்க வந்துள்ளார். தற்போது இவர் சரித்திர கதையம்சம் கொண்ட படமாக உருவாகியுள்ள 'சாகுந்தலம்' படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து இந்த படம் வருகிற பிப் 17-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

மேலும், சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ள நடிகை சமந்தா உடற்பயிற்சியிலும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோவை சமந்தா தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

samantha,social networking site ,சமந்தா,சமூக வலைத்தளம்

மேலும் இதனுடன் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், "கஷ்டமான நேரத்தில் என்னை உடற்பயிற்சி செய்ய ஊக்குவித்த பயிற்சியாளருக்கு நன்றி. கடுமையான உணவு கட்டுப்பாட்டை பின்பற்றி வருகிறேன். சாப்பிடுவதால் மட்டும் வலிமை வராது, நாம் சிந்திக்கும் எண்ணத்தில்தான் வலிமை இருக்கிறது என இப்போது கற்றுக்கொள்ள முடிந்துள்ளது'' என அவர் பகிர்ந்துள்ளார்.

இதனை அடுத்து இந்த பதிவு அனைவரையும் கவர்ந்துள்ளது. மேலும், இவர் நடிக்கும் வெப் தொடரில் சண்டை காட்சிகள் உள்ளன என்றும், அதில் நடிக்கவே கடும் உடற்பயிற்சியில் ஈடுபட்டு உள்ளார் என கூறப்படுகிறது.

Tags :