Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கழுகு பட இயக்குனரின் இயக்கத்தில் திரில்லர் படத்தில் நடிக்கும் நடிகர் சசிகுமார்

கழுகு பட இயக்குனரின் இயக்கத்தில் திரில்லர் படத்தில் நடிக்கும் நடிகர் சசிகுமார்

By: Nagaraj Thu, 19 Oct 2023 07:09:30 AM

கழுகு பட இயக்குனரின் இயக்கத்தில் திரில்லர் படத்தில் நடிக்கும் நடிகர் சசிகுமார்

சென்னை: ‘கழுகு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சத்யசிவா இயக்கும் 90-களின் பின்னணியில் உருவாகி வரும் திரில்லர் படத்தில் நடிகர் சசிகுமார் நடித்து வருகிறார்.

‘கழுகு’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சத்யசிவா இப்படத்தை இயக்குகிறார். சசிகுமாரின் கடைசியாக வெளியான ‘அயோத்தி’ திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.

kalugu directors,attention,new film, ,திரில்லர் படம், பாலிவுட் நடிகர், லிஜோமோல் ஜோஸ்

அதையடுத்து ‘கழுகு’ படத்தின் இயக்குநர் சத்ய சிவா இயக்கும் புதிய படத்தில் நடித்து வருகிறார். ஜெய்பீம் படத்தின் மூலம் கவனம் பெற்ற லிஜோமோல் ஜோஸ் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார்.

பாலிவுட் நடிகர் சுதேவ் நாயர் வில்லனாக நடிக்கிறார். பாண்டியன் பரசுராம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். இப்படம் 90-களில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட திரில்லர் நாடகம்.

பெயரிடப்படாத இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் நடந்து வருகிறது. படத்தின் தலைப்புடன் கூடிய டீசர் விரைவில் வெளியாகவுள்ளது.

Tags :