Advertisement

தீபாவளியை முன்னிட்டு நடிகர் சசிகுமார் படத்தின் ட்ரைலர் வெளியீடு

By: Nagaraj Sat, 14 Nov 2020 10:54:37 PM

தீபாவளியை முன்னிட்டு நடிகர் சசிகுமார் படத்தின் ட்ரைலர் வெளியீடு

தீபாவளியை முன்னிட்டு நடிகர் சசிகுமார் நடித்து வரும் எம்ஜிஆர் மகன் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டுள்ளது.

சசிகுமார், சத்யராஜ் நடிப்பில் உருவாகிவரும் 'எம்ஜிஆர் மகன்' திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இயக்குநர் பொன்ராம், கதை-திரைக்கதை-வசனம் எழுதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் சசிகுமார், சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், சமுத்திரக்கனி, மிருணாளினி ரவி, சிங்கம் புலி ஆகியோர் நடிக்கின்றனர்.

trailer,actor sasikumar,son of mgr,director ponram ,ட்ரைலர், நடிகர் சசிகுமார், எம்ஜிஆர் மகன், இயக்குனர் பொன்ராம்

இந்த படத்தின் மூலம் பிரபல பாடகர் அந்தோனி தாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக வினோத் ரத்தினசாமியும், விவேக் ஹர்ஷன் எடிட்டிங் பணிகளையும் மற்றும் துரைராஜ் கலை இயக்குநராகவும் பணிபுரிந்துள்ளனர்.

இந்த படம் சென்சார் செய்யப்பட்டு யூ சான்றிதழை பெற்றிருந்தது. தீபாவளியை முன்னிட்டு இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Tags :