Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக நடிகர் சதீஷ் அறிவிப்பு

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக நடிகர் சதீஷ் அறிவிப்பு

By: Nagaraj Tue, 25 Apr 2023 7:54:52 PM

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக நடிகர் சதீஷ் அறிவிப்பு

சென்னை: பாக்யலட்சுமி சீரியலில் கோபியாக நடித்து வரும் சதீஷ், அதில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விஜய் டிவி-யில் திங்கள் முதல் சனி வரை இரவு 8.30 முதல் 9 மணி வரை ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியலட்சுமியாக நடிகை சுசித்ரா ஷெட்டி, கோபியாக நடிகர் சதீஷ்குமார், பாக்கியாவின் மாமனாராக, ராமமூர்த்தி கேரக்டரில் நடிகர் எஸ்டிபி ரோசரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

பாக்யாவை விவாகரத்து செய்துவிட்டு, முன்னாள் காதலி ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்யும் கோபி, நடிப்பில் அசால்ட்டாக நடித்துள்ளார். இந்த சீரியலை பார்வையாளர்கள் தொடர்ந்து பார்ப்பதற்கு முக்கிய காரணமும் இவர்தான்.

actor,bhagyalakshmi,gopi,serial,vijay tv, ,கோபி, சீரியல், நடிகர், பாக்யலட்சுமி, விஜய் டிவி

இந்நிலையில் தற்போது பாக்கிய லட்சுமி சீரியலில் இருந்து விலகுவதாக தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், “எல்லாருக்கும் வணக்கம். நான் சொல்லப் போறது நிறைய பேருக்கு கோபம், எரிச்சல், வருத்தம் வரலாம். கஷ்டமா இருக்கு ஆனா இதை செஞ்சே ஆகணும். இன்னும் 10, 15 எபிசோட்ல பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுறேன். அதுல எந்த மாற்றமும் இல்ல. சதீஷ் ஆகிய நான் கோபியா நடிச்சிட்டு இருக்கிற இந்தக் கேரக்டரிலிருந்து விலகுறேன். காரணங்கள் பல இருக்கு.

ஆனா, கொஞ்சம் பர்சனல் காரணங்கள். கோபி கேரக்டரில் நடிக்க வாய்ப்பு கொடுத்த விஜய் டிவிக்கு ரொம்ப நன்றி. நானும் யாருக்கும் கஷ்டம் கொடுக்காம எல்லாரும் பாராட்டுற மாதிரி என்னால் முடிஞ்ச அளவுக்கு சுமாரா நடிச்சிருக்கேன். என் மேல அன்பு காட்டுற அனைவருக்கும் நன்றி” எனக் கூறியுள்ளார்.

Tags :
|
|
|