Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகும் நடிகர் சத்யராஜ்

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகும் நடிகர் சத்யராஜ்

By: Nagaraj Sat, 19 Aug 2023 07:01:26 AM

நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகும் நடிகர் சத்யராஜ்

சென்னை: நடிகர் கார்த்தி நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக சத்யராஜ் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடிகர் கார்த்தி நடிப்பில் விருமன், சர்தார், பொன்னியின் செல்வன் படங்கள் வியாபார ரீதியாக பெரும் வெற்றி பெற்றது. அதன்பின், ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூ முருகன் இயக்கத்தில் ‘ஜப்பான்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இது கார்த்தியின் 25-வது படமாகும்.

villain,actor sathyaraj,karthi,movie,released ,வில்லன், நடிகர் சத்யராஜ், கார்த்தி, படம், வெளியாகி உள்ளது

தொடர்ந்து, ‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்து வருகிறார்.

இந்நிலையில், இப்படத்தில் கார்த்திக்கு வில்லனாக நடிகர் சத்யராஜ் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|