- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் ஷாரூக்கின் பதான் படம் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை
நடிகர் ஷாரூக்கின் பதான் படம் ரூ.1000 கோடி வசூல் செய்து சாதனை
By: Nagaraj Wed, 01 Mar 2023 11:54:37 AM
மும்பை: நடிகர் ஷாரூக்கின் பதான் படம் ரூ.1000 கோடி வசூல் செய்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
‘பதான்’ திரைப்படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் அமோகமான வரவேற்பு இருந்தது. உள்நாட்டில் ` 623 கோடி; வெளிநாட்டில் ` 377 கோடி என `1000 கோடி ரூபாய் வசூலை இப்படம் எட்டியுள்ளது.
பாலிவுட் பாட்ஷா என அழைக்கப்படும் ஷாருக்கான் கொடுத்துள்ள சூப்பர் கம்பேக் படம்தான் பதான் என்றால் மிகையில்லை. இந்த படம் ரூ.1000 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்த ஐந்தாவது திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இதற்கு முன்பாக ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி 4 படங்கள் விபரம்: 1) Dangal ` 1914 கோடி; 2) பாகுபலி 2 ` 1747 கோடி; 3) கே.ஜி.எப். 2 ` 1188 கோடி, 4) ஆர்.ஆர்.ஆர். ` 1174 கோடி. தற்போது ஐந்தாவது படமாக பதான் ரூ.1000 கோடி வசூலித்துள்ளது.
ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகிய இப்படம், இந்தி மட்டுமன்றி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியானது என்பதும் குறிப்பிடத்தக்கது.