Advertisement

அவள் திரைப்படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார் நடிகர் சித்தார்த்

By: Nagaraj Fri, 18 Dec 2020 09:36:26 AM

அவள் திரைப்படத்தின் 2ம் பாகத்தில் நடிக்க உள்ளார் நடிகர் சித்தார்த்

அவள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளார் நடிகர் சித்தார்த் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

சாக்லேட் பாய் நடிகராக ரசிகர்கள் மத்தியில் பாய்ஸ் படத்தின் மூலம் பிரபலமானவர் சித்தார்த். யாருக்கும் இல்லாத அதிர்ஷ்டமாக முதல் படமே மிகப்பெரிய பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் பட வாய்ப்பு கிடைத்தது.

அசிஸ்டன்ட் டைரக்டராக தன்னுடைய சினிமா கேரியரை தொடங்கிய சித்தார்த்துக்கு முதல் படமே பிரம்மாண்ட படம் என்பதால் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்களில் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது.

மணிரத்தினம் இயக்கிய ஆயுத எழுத்து படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இவர் மணிரத்னம் இயக்கிய கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் முதன் முதலாக அசிஸ்டன்ட் டைரக்டராக வேலை செய்தது குறிப்பிடத்தக்கது.

she,movie,horror,siddharth,part ii ,அவள், திரைப்படம், ஹாரர், சித்தார்த், இரண்டாம் பாகம்

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் பிரபல நடிகராக வலம் வந்த சித்தார்த்துக்கு சமீபகாலமாக சொல்லிக்கொள்ளும் அளவுக்கு ஹிட் படங்கள் எதுவுமே கிடைக்கவில்லை.

கடைசியாக சித்தார்த் நடிப்பில் வசூலை அள்ளிய திரைப்படம் என்றால் அது அவள் என்ற ஹாரர் திரைப்படம் தான். தற்போது வெற்றிக்காக அவள் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க உள்ளாராம். எதிர்பார்ப்பே இல்லாமல் வெளியாகி நல்ல வசூலை குவித்த திரைப்படம் அவள்.

இந்த படத்திலும் சித்தார்த்துக்கு ஜோடியாக ஆண்ட்ரியா நடிக்க அதிக வாய்ப்புள்ளதாம். மேலும் முதல் பாகத்தைப் போலவே இந்த படத்திலும் இருவருக்கும் கிளுகிளுப்பான காட்சிகள் அதிகமாகவே இருக்கும் என்கிறார்கள்.

Tags :
|
|
|