Advertisement

நடிகர் சித்தார்த்தின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

By: Nagaraj Tue, 18 Apr 2023 7:54:41 PM

நடிகர் சித்தார்த்தின் புதிய படம் பற்றிய அறிவிப்பு வெளியானது

சென்னை: பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர் அருண்குமார். இவரது தயாரிப்பில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்தார்த் பிறந்தநாளில் இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘சித்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

நடிகர் சித்தார்த் இயக்குநர் மணிரத்னம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். பின்னர் ஷங்கர் இயக்கத்தில் கதாநாயகனாக நடித்தார். 2019இல் அவரது அருவம் படம் வெளியானது. பின்னர் தமிழில் எதுவும் வெளியாகவில்லை.

தெலுங்கில் 2021இல் மஹாசமுத்திரம் படம் வெளியானது. இந்தப் படத்தில் நடிகை அதிதி ராவ் ஹைதரி உடன் நடித்திருந்தார். இவருடன் காதலில் இருப்பதாக சமூக வலைதளங்களில் அடிக்கடி வைரலாகும்.

siddharth,siddha,new movie,announcement,birthday,music ,சித்தார்த், சித்தா, புதிய படம், அறிவிப்பு, பிறந்த நாள், இசை

பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி படங்களை இயக்கியவர் அருண்குமார். இவரது தயாரிப்பில் சித்தார்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. சித்தார்த் பிறந்தநாளில் இந்தப் போஸ்டர் வெளியாகியுள்ளது. படத்திற்கு ‘சித்தா’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

சித்தப்பா உறவினை மையப்படுத்தி இந்தப் படம் உருவாகிவருகிறது. வழக்கமான மெலோ டிராமாவாக இல்லாமல் த்ரில்லர் படமாக இருக்குமென இயக்குநர் கூறியுள்ளார். திபு நினன் தாமஸ் இசையமைக்க உள்ளார்.

Tags :
|