Advertisement

பாலிவுட்டில் பாடல் பாடி அறிமுகமான நடிகர் சிம்பு

By: Nagaraj Wed, 19 Oct 2022 12:10:29 PM

பாலிவுட்டில் பாடல் பாடி அறிமுகமான நடிகர் சிம்பு

சென்னை: பாலிவுட் சினிமாவில் பாடகராக அறிமுகமாகி உள்ளார் சிம்பு. சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டபுள் எக்ஸ்எல்’ படத்தில் ‘தாலி…தாலி…’ பாடலை சிம்பு பாடியுள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘வெந்து தணிந்தது காடு’ திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

சிம்பு தற்போது கிருஷ்ணா இயக்கத்தில் ‘பத்து தல’ படத்தில் நடித்து வருகிறார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பத்து தல படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில், பாலிவுட் சினிமாவில் பாடகராக அறிமுகமானார் சிம்பு. சத்ரம் ரமணி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘டபுள் எக்ஸ்எல்’ படத்தில் ‘தாலி…தாலி…’ பாடலை சிம்பு பாடியுள்ளார்.

Tags :