Advertisement

கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு

By: vaithegi Mon, 06 Nov 2023 3:18:47 PM

கமல்ஹாசனுக்கு நடிகர் சிவக்குமார் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பு


உலக நாயகன் கமல்ஹாசன் நாளை 69-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, ரசிகர்கள் முதல் பிரபலங்கள் வரை இன்றே தங்களது வாழ்த்துக்களை குவித்து கொண்டு வருகிறார்கள்.

அந்த வகையில் உலக நாயகன் கமலுக்கு நெருங்கிய நண்பரான நடிகர் சிவகுமார், தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

happy birthday,shivakumar ,பிறந்தநாள் வாழ்த்து ,சிவக்குமார்

இதையடுத்து தனது வாழ்த்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது, “சிவாஜி, கமலை தவிர வெரைட்டி ரோல்களை யாராலும் செய்ய முடியாது. 8 படங்களில் சேர்ந்து நடித்தோம்.

வில்லனாக நடித்து ஹீரோவாக உயர்ந்த முதல் நடிகர் நீங்கள்தான். நடிப்பில் இனி நீங்கள் சாதிக்க எதுவும் இல்லை. நீங்கள் திரையில் சாதித்ததை, அரசியலிலும் சாதிக்க முடியும். அரசியல் களம் உங்களுக்காக காத்திருக்கிறது. துணிந்து இறங்குங்கள்” என அவர் அதில் தெரிவித்துள்ளார்.



Tags :