Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கர்நாடகாவின் நந்தினி பாலுக்கு விளம்பர தூதரான நடிகர் சிவராஜ்குமார்

கர்நாடகாவின் நந்தினி பாலுக்கு விளம்பர தூதரான நடிகர் சிவராஜ்குமார்

By: Nagaraj Wed, 02 Aug 2023 7:45:14 PM

கர்நாடகாவின் நந்தினி பாலுக்கு விளம்பர தூதரான நடிகர் சிவராஜ்குமார்

பெங்களூரு: கர்நாடகாவில் நந்தினி பாலுக்கு விளம்பர தூதராக நடிகர் சிவராஜ்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கர்நாடகா பால் கூட்டமைப்பு நந்தினி என்ற பெயரில் பால் பாக்கெட்டுகளை விற்பனை செய்கிறது. அதுமட்டுமின்றி, நெய், தயிர் மற்றும் பிற இனிப்பு வகைகளையும் தயாரித்து விற்பனை செய்கிறது. நந்தினி பால் பொருட்கள் கர்நாடகாவில் பிரபலம்.

actor,advertisement,ambassador,nandini,nomination,paul,shivarajkumar ,சிவராஜ்குமார், தூதர், நடிகர், நந்தினி, நியமனம், பால், விளம்பரம்

இந்த நந்தினி பாலின் விளம்பர தூதராக மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் இருந்தார். கட்டணம் ஏதுமின்றி பால் பொருட்களை இலவசமாக விளம்பரம் செய்தார். ஓராண்டுக்கு முன் திடீரென இறந்து விட்டார். கர்நாடக பால் சம்மேளன தலைவர் பீமா நாயக், நடிகர் சிவராஜ்குமாரை பெங்களூருவில் உள்ள அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து பேசினார்.

அப்போது, நந்தினி பாலுக்கு விளம்பர தூதராக இருந்து அவற்றை விளம்பரப்படுத்துமாறு கேட்டுக் கொண்டார். இதை சிவராஜ்குமார் மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டார். தனது தந்தை, சகோதரரை போல் தானும் நந்தினி பாலுக்கு கட்டணம் பெறாமல் விளம்பர தூதராக இருப்பதாக அவர் கூறினார்.

இந்த சந்திப்பின்போது கர்நாடக பால் கூட்டமைப்பின் நிர்வாக இயக்குனர் ஜெகதீஷ் உடன் இருந்தார். அதன் பிறகு நிருபர்களுக்கு பேட்டியளித்த பீமா நாயக், ‘நந்தினி பாலுக்கு நடிகர் சிவராஜ்குமார் கட்டணம் பெறாமல் விளம்பர தூதராக செயல்பட ஒப்புக்கொண்டுள்ளார்’ என்று கூறினார்.

Tags :
|
|