Advertisement

கட்டான சிக்ஸ்பேக் உடலுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி

By: Nagaraj Sun, 20 Sept 2020 4:50:08 PM

கட்டான சிக்ஸ்பேக் உடலுடன் உள்ள புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சூரி

கட்டான சிக்ஸ்பேக் உடலுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் நடிகர் சூரி. இந்த படமட் தற்போது செம வைரலாகி உள்ளது.

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களுள் ஒருவரான சூரி வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் பிரபலமானார். தனது யதார்த்தமான காமெடியால் மக்கள் மனதில் குறுகிய காலத்தில் இடம் பிடித்த இவர் தொடர்ந்து விஜய் அஜித் , சூர்யா போன்ற முன்னணி நாடிகளின் படங்களில் நடித்து கிடு கிடுவென உயர்ந்தார்.

பின்னர் சினிமாவில் சம்பாதித்த பணத்தை வைத்து பிசினஸ் துவங்க திட்டமிட்ட சூரி மதுரையில் அம்மன் என்ற ஹோட்டலை திறந்தார். இப்படி சினிமா தொழில் கையில் இருந்தாலும் சைடு பிசினஸ் போன்று தனக்கு பிடித்த தொழில்களில் ஈடுபட்டு பணம் சம்பாதித்து வருகிறார்.

actor suri,six pack,photography,fans,cinema ,நடிகர் சூரி, சிக்ஸ் பேக், புகைப்படம், ரசிகர்கள், சினிமாத்துறை

இதற்கிடையில் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்தே குழந்தைகளுடன் விளையாடுவது, வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோ வெளியிடுவது உள்ளிட்டவரை தாண்டி வேலை இழந்து திண்டாடி வந்த திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், சினிமாத்துறை நண்பர்கள் உள்ளிட்டோருக்கு உதவி செய்து வந்தார்.

இந்நிலையில் தற்போது ஜிம்மில் வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்துவிட்டு சிக்ஸ் பேக் வைத்துக்கொண்டு எடுத்த மிரட்டலான புகைப்படத்தை வெளியிட்டு டாப் ஹீரோக்களுக்கே செம டஃப் கொடுத்துள்ளார். ஒரு காமெடி நடிகர் தனக்கு கிடைத்த வாய்ப்பை மட்டும் பயன்படுத்திக்கொண்டு அப்படியே போகாமல் தொடர்ந்து முயற்சித்து முன்னேறி வருவதை கண்டு ரசிகர்கள் பாராட்டியுள்ளனர்.

Tags :
|