Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஹிந்தியில் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தம்

ஹிந்தியில் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தம்

By: Nagaraj Wed, 04 Oct 2023 11:52:07 AM

ஹிந்தியில் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்க நடிகர் சூர்யா ஒப்பந்தம்

சென்னை: சூர்யா ஹிந்தியில் பிரமாண்ட வரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் வரலாற்று பகுதியும் இருப்பதாகவும், அதை பிரம்மாண்டமாக தயாரித்து வருவதாகவும் படக்குழு கூறி இருக்கிறது.

இந்நிலையில் தற்போது சூர்யா ஹிந்தியில் பிரம்மாண்டவரலாற்று படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

hindi film,karna,rs.500 crore budget,actor suriya,contract ,ஹிந்தி படம், கர்ணா, ரூ.500 கோடி பட்ஜெட், நடிகர் சூர்யா, ஒப்பந்தம்

மகாபாரத கதையை மையப்படுத்தி கர்ணா என்ற படத்தை Rakeysh Omprakash Mehra இயக்க இருக்கிறார். அதில் தான் சூர்யா ஒப்பந்தம் ஆகி இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக இருக்கிறதாம். சூர்யா தற்போது கைவசம் இருக்கும் வாடிவாசல், சுதா கொங்கரா படம் ஆகியவற்றை முடித்தபிறகு இந்த படத்தில் நடிப்பார் என தெரிகிறது.

Tags :
|