Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • கங்குவா படத்திற்கு மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறாராம் நடிகர் சூர்யா

கங்குவா படத்திற்கு மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறாராம் நடிகர் சூர்யா

By: Nagaraj Sat, 01 July 2023 8:37:23 PM

கங்குவா படத்திற்கு மீண்டும் இயக்குனர் சிவா இயக்கத்தில் நடிக்கிறாராம் நடிகர் சூர்யா

சென்னை: 'கங்குவா' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குனர் சிவா இயக்கத்தில் சூர்யா தற்போது நடித்து வரும் படம் 'கங்குவா'. ஸ்டுடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் பாலிவுட் நடிகை திஷா பத்தானி, யோகி பாபு, கிங்ஸ்லி, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

actor surya,ganguwa,film,director siva,direction ,நடிகர் சூர்யா, கங்குவா, படம், இயக்குனர் சிவா, இயக்கம்

தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கும் இப்படம் 3டி முறையில் சரித்திர படமாக 10 மொழிகளில் வெளியாகவுள்ளது. 'கங்குவா' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டரை சமீபத்தில் படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 'கங்குவா' படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் நடிகர் சூர்யா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|