Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் புது தோற்றத்தில் நடிகர் சூர்யா

சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் புது தோற்றத்தில் நடிகர் சூர்யா

By: Monisha Tue, 03 Nov 2020 6:10:17 PM

சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் புது தோற்றத்தில் நடிகர் சூர்யா

சூரரைப் போற்று படத்தின் இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் திருமண விழாவில் நடிகர் சூர்யா கலந்துகொண்டார்.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் சுதா கொங்கரா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான துரோகி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். பின்னர் 2016-ம் ஆண்டு இவர் இயக்கத்தில் வெளியான இறுதிச் சுற்று திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு தேசிய விருது உள்பட பல்வேறு விருதுகளை வென்று குவித்தது.

சுதா கொங்கரா அடுத்ததாக சூர்யாவை வைத்து இயக்கி உள்ள படம் 'சூரரைப் போற்று'. இப்படம் வருகிற தீபாவளி பண்டிகையையோட்டி நவ 12-ந் தேதி ஓடிடி தளத்தில் ரிலீசாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் நடிகர் சூர்யா இயக்குனர் சுதா கொங்கராவின் மகள் உத்ராவின் திருமண விழாவில் கலந்துகொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வந்தன.

நடிகர் சூர்யா புதுவிதமான தோற்றத்தில் பாரம்பரிய உடையணிந்து இந்த திருமண விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

Tags :