Advertisement

இயக்குனர் விக்ரம் குமாருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சூர்யா

By: Nagaraj Wed, 10 June 2020 09:44:18 AM

இயக்குனர் விக்ரம் குமாருடன் கூட்டணி அமைக்கும் நடிகர் சூர்யா

24 படத்தின் இயக்குனருடன் மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளார் நடிகர் சூர்யா என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

2016-ல் விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்த படம் 24. பெரிய அளவில் வெற்றி பெறவில்லையென்றாலும் இந்தப் படத்தின் கதை, சமூகவலைத்தளங்களில் பெரிய விவாதத்தை உருவாக்கியது.

இந்நிலையில் விக்ரம் குமாருடன் இணைந்து மற்றொரு படத்தை உருவாக்கும் திட்டத்தில் உள்ளார் சூர்யா. இதுபற்றி ஒரு பேட்டியில் விக்ரம் குமார் கூறியதாவது:

surya,vikram kumar,alliance,24 movie,fans ,சூர்யா, விக்ரம் குமார், கூட்டணி, 24 படம், ரசிகர்கள்


24 படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்கி வருகிறேன். ஆத்ரேயா கதாபாத்திரம் முக்கியப் பங்கு வகிக்கும் வகையில் கதை உருவாக்கப்பட்டு வருகிறது. நீண்ட நாளாக என்னுடன் இணைந்து மற்றொரு படம் பண்ண வேண்டும் என சூர்யா விருப்பப்படுகிறார். 2021-ல் நானும் சூர்யாவும் இணைந்து ஒரு படத்தைத் தருவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள சூரரைப் போற்று விரைவில் வெளியாகவுள்ளது. அடுத்ததாக இயக்குநர் ஹரியுடன் அருவா மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து வாடிவாசல் என இரு படங்களில் நடிக்கவுள்ளார் சூர்யா. இதன்பிறகு விக்ரம் குமார் இயக்கத்தில் சூர்யா நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டணி பற்றிய தகவல் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags :
|