Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • ஒரு வீட்டில் அனைவரும் படித்தால் இந்த நாடே மாறும்; நடிகர் சூர்யா டுவிட்

ஒரு வீட்டில் அனைவரும் படித்தால் இந்த நாடே மாறும்; நடிகர் சூர்யா டுவிட்

By: Monisha Mon, 14 Sept 2020 5:09:41 PM

ஒரு வீட்டில் அனைவரும் படித்தால் இந்த நாடே மாறும்; நடிகர் சூர்யா டுவிட்

பலத்த எதிர்ப்புகளுக்கிடையே நேற்று தமிழகம் முழுவதும் நீட் தேர்வு நடந்தது. இந்த தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நடிகர் சூர்யா நேற்று வெளியிட்ட அறிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த அறிக்கைக்கு பெரும்பாலான திரையுலகினர், அரசியல்வாதிகள், சமூக ஆர்வலர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஒரு சிலர் மட்டும் சூர்யாவுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சூர்யாவின் இந்த அறிக்கையின் பரபரப்பே இன்னும் நீங்காத நிலையில் தற்போது சூர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் புதிதாக டுவிட் ஒன்றை பதிவு செய்துள்ளார். அந்த டுவிட்டில் அவர் கூறியிருப்பதாவது:-

ஒரு வீட்டில் ஒருத்தர் படித்தால் அந்த வீடு மாறும். ஒவ்வொருத்தரும் படித்தால் இந்த நாடே மாறும். இன்றைய பொருளாதார நெருக்கடியில் நிறைய மாணவர்கள் தங்களுடைய கல்வியை பாதியில் கைவிட்டு விடுகின்றனர். நாம் நினைத்தால் அதை மாற்றி விடலாம் என்று கூறியுள்ளார்.

actor surya,twitter,education,students,agaram foundation ,நடிகர் சூர்யா,டுவிட்டர்,கல்வி,மாணவர்கள்,அகரம் பவுண்டேஷன்

மேலும் 'ஒன்றிணைவோம் மாணவர்களோடு துணை நிற்போம்' என்று அந்த டுவிட்டில் கூறிய சூர்யா, கல்வியை பாதியில் விட்ட மாணவர்கள் தங்களுடைய விண்ணப்பங்களை அகரம் பவுண்டேஷனில் பதிவு செய்துள்ளனர். இதுவரை வந்த 3030 விண்ணப்பங்கள் தன்னார்வலர்களால் ஆய்வு செய்யப்படுகிறது. இந்த விண்ணப்பங்களை ஆய்வு செய்து விரைவில் அகரம் மூலம் படிக்கும் மாணவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூரரை போற்று படத்தில் கிடைத்த வருமானத்தில் ஏழை மாணவர்களின் கல்வி உள்பட சமூக சேவைக்காக நடிகர் சூர்யா ரூ.3.5 கோடி ஒதுக்கியுள்ளார்.

Tags :