Advertisement

வசூலில் செம வேட்டையாடுமா நடிகர் சூர்யாவின் கங்குவா படம்

By: Nagaraj Sun, 23 July 2023 11:58:42 AM

வசூலில் செம வேட்டையாடுமா நடிகர் சூர்யாவின் கங்குவா படம்

சென்னை: பாகுபலி, கே ஜி எஃப் படங்களை கங்குவா மிஞ்சும் என்று கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார்

மேலும் பாலிவுட் நடிகை திஷா பாட்னி கதாநாயகியாக நடிக்கிறார். இப்படம் வெளிவருவதற்கு முன்பே ரூ. 500 கோடி வரை பிசினஸ் செய்துவிட்டது என கூறப்படுகிறது. ஆனால், அது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.

collection,kangua,accomplishment,anticipation. actor surya ,வசூல், கங்குவா, சாதனை படைக்கும், எதிர்பார்ப்பு. நடிகர் சூர்யா

இன்று நடிகர் சூர்யாவின் பிறந்தநாள் என்பதினால், படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோவை நள்ளிரவு 12.01 மணிக்கு படக்குழு வெளியிட்டுள்ளனர். காட்டுதீ போல் பரவி வரும் கங்குவா படத்தின் கிலிம்ப்ஸ் வீடியோ வைரலாகி வருகிறது. குறிப்பாக தெலுங்கு மற்றும் இந்தியில் மாபெரும் வரவேற்பு கிடைத்துள்ளது என தெரியவந்துள்ளது.

இந்நிலையில், அடுத்த வருடம் வெளிவரும் இப்படம் கண்டிப்பாக உலகளவில் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்யும் என திரை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதே போல் கடந்த சில மாதங்களுக்கு தயாரிப்பாளர் அளித்த பேட்டி ஒன்றில் பாகுபலி, கே ஜி எஃப் படங்களை கங்குவா மிஞ்சும் என கூறியிருந்தார். இதனால் கண்டிப்பாக வசூலில் கங்குவா சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags :
|