Advertisement

நடிகர் சூர்யாவின் புதிய ஹேர்ஸ்டைல் செம டிரண்டாகி வருகிறது

By: Nagaraj Wed, 04 Nov 2020 7:56:45 PM

நடிகர் சூர்யாவின் புதிய ஹேர்ஸ்டைல் செம டிரண்டாகி வருகிறது

டிரண்டாகும் சூர்யா ஹேர்ஸ்டைல்...நடிகர் சூர்யாவின் புதிய ஹேர்ஸ்டைல் தான் தற்போது டிரண்டாகி நெட்டிசன்கள் பலரையும் வசம் ஈர்த்துள்ளது.

சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள சூரரைப் போற்று திரைப்படம் வரும் நவம்பர் 12 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. 2016 ம் ஆண்டு இறுதிச்சுற்று திரைப்படத்தை இயக்கி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் சுதா கொங்கரா இவர் தற்போது சூரரைப்போற்று படப்பிடிப்பை முடித்த கையோடு தனது மகள் உத்தரா திருமணத்தை சென்னையில் நடத்தியுள்ளார்.

surya,hairstyle,barber,youth ,சூர்யா, ஹேர்ஸ்டைல், முடி திருத்தும் நிலையம், இளைஞர்கள்

இந்த திருமண நிகழ்ச்சியில் நடிகர் சூர்யா கலந்துகொண்டு எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் தற்போது வைரலாகி வருகிறது. இதில் நடிகர் சூர்யா புதியதொரு ஹேர் ஸ்டைலை வைத்துள்ளார். முன்னதாக சூரரை போற்று படத்திற்காக ஷார்ட் ஹேர் வைத்து ரசிகர்களை ஈர்த்த சூர்யா, இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாக இருக்கும் வாடிவாசல் திரைப்படத்திற்காக இந்த புதிய ஹேர்ஸ்டைலை வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா லாக்டவுனில் பல நாட்கள் ஹேர்கட் செய்யாமல் இருந்த இளைஞர்கள் பலரும் தற்போது முடிதிருத்தும் நிலையங்களில் சூர்யாவின் இந்த புதிய ஹேர்ஸ்டைலை கேட்டு அடம் பிடிக்கின்றனராம்.

Tags :
|
|