Advertisement

சந்திரமுகி 2 படத்தில் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் வடிவேலு

By: Nagaraj Sat, 29 July 2023 3:10:07 PM

சந்திரமுகி 2 படத்தில் டப்பிங் பணிகளை முடித்த நடிகர் வடிவேலு

சென்னை: 'சந்திரமுகி 2' படத்தில் வடிவேலுவின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர்.

ராகவா லாரன்ஸ் தற்போது நடித்துள்ள திரைப்படம் ‘சந்திரமுகி -2’. இப்படத்தின் கங்கனா ரனாவத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் 'சந்திரமுகி -2'. இப்படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ளார். கங்கனா ரனாவத் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் வடிவேலு, ராதிகா உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்திருக்கின்றனர்.

லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு எம்.எம் கீரவாணி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்பான புகைப்படங்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் படக்குழு வெளியிட்டு வந்தது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவுற்றது.

'சந்திரமுகி 2' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகவுள்ளது. இந்நிலையில், 'சந்திரமுகி 2' படத்தில் வடிவேலுவின் டப்பிங் பணிகள் நிறைவடைந்துள்ளதாக படக்குழு வீடியோ ஒன்றை பகிர்ந்து அறிவித்துள்ளனர். மேலும், விரைவில் அப்டேட்கள் வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளனர்.

Tags :