Advertisement

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகிறாரா நடிகர் வடிவேலு?

By: Nagaraj Sun, 07 June 2020 8:48:02 PM

சிம்பு நடிக்கும் புதிய படத்தில் வில்லனாகிறாரா நடிகர் வடிவேலு?

இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிக்கும் புதிய படத்தில் அவருக்கு வில்லனாக நடிக்கிறார் நடிகர் வடிவேலு என்று தகவல்கள் உலா வருகிறது.

தமிழ் சினிமாவில் யாராலும் அசைக்க முடியாத இடத்தில் இருந்தவர் வடிவேலு. தனக்கென்று தனி பாணியில் நகைச்சுவையில் வெளுத்துக் கட்டியவர். கதாநாயகனாகவும் நடித்து அசத்தினார். ஆனால், அவரின் அரசியல் பிரச்சாரம் அவரின் திரை வாழ்க்கைக்கு முட்டுக்கட்டையானது.

simbu,vadivelu,problem,villain,mishkin ,
சிம்பு, வடிவேலு, பிரச்னை, வில்லன், மிஷ்கின்

அதை தொடர்ந்து நீண்ட வருடம் கழித்து ஒரு சில படங்களில் நடித்தார். ஆனால், அதுவும் பெரிதும் ஹிட் அடிக்கவில்லை. தற்போது வடிவேலு ஒரு சில பிரச்சனைகளால் படங்களில் நடிக்க முடியாமல் இருந்து வந்தது.

இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் நோக்கில், மிஷ்கின் இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருக்கும் படத்தில் வடிவேலுவை வில்லனாக நடிக்க பேச்சு வார்த்தை நடந்து வருகின்றதாம்.

Tags :
|