Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஆணையம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது

நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஆணையம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது

By: Nagaraj Mon, 27 Feb 2023 10:36:50 PM

நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஆணையம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது

சென்னை: நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஆணையம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக இருந்த வடிவேலு சில காரணங்களால் சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு சுராஜின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படத்தில் நடித்து ரசிகர்களுக்கு விருந்தளித்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

actor vadivelu,greetings,honorary doctorate , கௌரவ டாக்டர் பட்டம், நடிகர் வடிவேலு, வாழ்த்துக்கள்

இதைத் தொடர்ந்து பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘சந்திரமுகி-2’ படத்தில் நடிக்கிறார். பல கட்டங்களாக நடந்து வந்த இப்படத்தின் ஒரு கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. இந்நிலையில் நடிகர் வடிவேலுவுக்கு சர்வதேச ஆணையம் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

அதாவது, நடிகர் வடிவேலுவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதி வள்ளிநாயகம் தலைமையிலான ஊழல் எதிர்ப்பு மற்றும் மனித உரிமைகளுக்கான சர்வதேச ஆணையம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது. இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி கவனம் பெற்று வருகிறது

Tags :