Advertisement

மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய நடிகர் விஜய்

By: Nagaraj Tue, 11 July 2023 8:17:01 PM

மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்திய நடிகர் விஜய்

சென்னை: 2 மணிநேரம் ஆலோசனை... விஜய் மக்கள் இயக்கத்தின் 234 தொகுதி பொறுப்பாளர்களுடன் சென்னை பனையூரில் நடிகர் விஜய் 2 மணி நேரத்துக்கு மேல் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் பங்கேற்பதற்காக தனது வழக்கமான ஹேர் ஸ்டைலில், நீல நிற ஜீன்ஸ் சட்டை அணிந்து அடர் சாம்பல் நிற இன்னோவா கார் ஒன்றில் விஜய் வந்தார். அவரைக் கண்டதும் அவரது ரசிகர்கள் உற்சாகக் குரல் எழுப்பினர்.

மூடிய அறைக்குள் சுமார் 2 மணி நேரம் விஜய் ஆலோசனை நடத்தினார். அப்போது அரசியல் நிலவரம் உள்ளிட்டவை தொடர்பாக பொறுப்பாளர்களுடன் விஜய் பேசியதாக தெரிகிறது.

panayur,office,vijay,fans,executives,greetings ,பனையூர், அலுவலகம், விஜய், ரசிகர்கள், நிர்வாகிகள், வாழ்த்தினர்

ஆலோசனை முடியும் வரை பனையூர் அலுவலக வளாகத்தில் விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆலோசனையை முடித்து வெளியே வந்த விஜய், ரசிகர்களை நோக்கி கையசைத்தார். உடனே ரசிகர்கள் அவரை வாழ்த்தி முழக்கமிட்டனர்.

இதன் பின் நடிகர் விஜய் பாதுகாப்பு அளித்த காவல் துறையினருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். பின்னர் தனது காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

Tags :
|
|
|