- வீடு›
- பொழுதுபோக்கு›
- மகன் இயக்குனர் ஆகும் தகவல் கூட நடிகர் விஜய்க்கு தெரியாதாம்
மகன் இயக்குனர் ஆகும் தகவல் கூட நடிகர் விஜய்க்கு தெரியாதாம்
By: Nagaraj Mon, 04 Sept 2023 12:34:48 PM
சென்னை: மகன் இயக்குனராக அறிமுகம் ஆக உள்ளது நடிகர் விஜய்க்கு தெரியாமலேயே நடந்துள்ளது என்று கோலிவுட்டில் பரபரப்பாக பேசிக் கொள்கின்றனர். இது உண்மையா? இல்லை பொய்யா என்பதை நடிகர் விஜய் தரப்பினர்தான் தெரிவிக்க வேண்டும்.
நடிகர் விஜய்யின் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகம் ஆகிறார். முதல் படமே லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது இந்நிலையில் மகன் சஞ்சய் இயக்குனராக அறிமுகமானது விஜய்க்கே தெரியாது என்று தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்க்கும் அவருடைய மனைவி சங்கீதாவிற்கும் இடையே ஏற்பட்ட மனஸ்தாபம் காரணமாக அவர் குழந்தைகளுடன் லண்டனுக்கு சென்று விட்டாராம். அங்கு சஞ்சய்யின் தாத்தா செல்வாக்கு நிறைந்தவர்.
மேலும் லைக்கா சுபாஷ்கரனுடன் நட்பில் இருக்கிறாராம். இதனால், அவர் மூலமாக லைக்காவை தொடர்பு கொண்டு இருக்கலாம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. அப்படி தான் சஞ்சய் - லைக்கா கூட்டணி அமைந்தது என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்த விஷயம் குறித்து அறிவிப்பு வெளிவரும் வரை விஜய்க்கு கூட தனது மகன் இயக்குனராக அறிமுகமாக போகிறார் என தெரியாது என்றும் கூறுகின்றனர். இது உண்மையா? இல்லை வதந்தியா என்று விஜய் தரப்பினர்தான் விளக்கம் அளிக்க வேண்டும்.