- வீடு›
- பொழுதுபோக்கு›
- சிக்னல் விதிகளை மீறி காரை இயக்கியதாக நடிகர் விஜய்க்கு ரூபாய் 500 அபராதம்
சிக்னல் விதிகளை மீறி காரை இயக்கியதாக நடிகர் விஜய்க்கு ரூபாய் 500 அபராதம்
By: vaithegi Wed, 12 July 2023 11:02:57 AM
தமிழகத்தின் 234 சட்டமன்ற தொகுதிகளில் சேர்ந்த விஜய் மக்கள் இயக்க பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனை அடுத்து 2-ஆவது நாளாக இன்றும் ஆலோசனை நடைபெறுகிறது.
தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வரும் அவர் அரசியலில் தனது அடுத்த கட்ட நகர்வு பற்றி ஆயத்த பணிகளை மேற்கொண்டு வருகிறார் . இந்த நிலையில் சென்னை பனையூரில் நேற்று நடைபெற்ற விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கூட்டத்திற்கு நடிகர் விஜய் வருகை புரிந்தார்.
அப்போது அக்கறை சந்திப்பில் சென்ற நடிகர் விஜய்யின் கார் சிவப்பு சிக்னலை மதிக்காமல் சென்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து இது குறித்த காட்சிகள் இணையத்தில் வைரலாகின.
இதன் காரணமாக விஜய்க்கு சென்னை போக்குவரத்து காவல்துறையினர் 500 ரூபாயை அபராதமாக விதித்துள்ளனர்.கடந்தாண்டு இதே போல் கார் கண்ணாடியில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டதாக நடிகர் விஜய்க்கு அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.