Advertisement

  • வீடு
  • பொழுதுபோக்கு
  • தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் நடிகர் விஜய்

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் நடிகர் விஜய்

By: Nagaraj Sun, 08 Jan 2023 6:00:06 PM

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் மீது கோபத்தில் இருக்கும் நடிகர் விஜய்

சென்னை: திட்டமிடுதலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு மீது அப்செட்டில் இருக்கிறார் விஜய் என தகவல் வந்திருக்கிறது. மேலும் வாரிசு ட்ரைலர் கட் சொல்லும் அளவுக்கு இல்லை என்றும் அவர் கோபத்தில் இருக்கிறாராம்.

விஜய் ரசிகர்கள் தற்போது வாரிசு படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்க்க தயாராகி வருகின்றனர். முதலில் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என சொல்லப்பட்ட நிலையில் துணிவு ரிலீஸ் ஆகும் அதே 11ம் தேதி வாரிசும் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டது.

தேதி மாற்றப்பட்டதால் வெளிநாடு ரிலீஸில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகிறதாம். அமெரிக்காவில் பிரீமியர் காட்சி இன்னும் உறுதி செய்யப்படாமல் இருக்கிறது. ரிலீஸ் தேதியில் இருக்கும் குழப்பம் தான் வெளிநாடுகளில் பிரச்சனையாக இருக்கிறது.

director vamsi,warisu trailer,gobham,vijay,producer ,இயக்குனர் வம்சி, வாரிசு ட்ரைலர், கோபம், விஜய், தயாரிப்பாளர்

மேலும் வாரிசை தெலுங்கில் வாருசுடு என்கிற பெயரில் டப் செய்து வெளியிடுகிறார்கள். அது வாரிசு ரிலீஸ் ஆகி ஒரு சில தினங்கள் கழித்து தான் வரும் என தெரிகிறது. அதன் ரீரெக்கார்டிங் பணிகள் முடியாதது தான் தாமதத்திற்கு காரணம்.

திட்டமிடுதலில் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கும் தயாரிப்பாளர் தில் ராஜு மீது அப்செட்டில் இருக்கிறார் விஜய் என தகவல் வந்திருக்கிறது. மேலும் வாரிசு ட்ரைலர் கட் சொல்லும் அளவுக்கு இல்லை என்றும் அவர் கோபத்தில் இருக்கிறாராம்.

இயக்குனர் வம்சியின் வாரிசு ட்ரைலரை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் பல விதமாக ட்ரோல் செய்தது குறிப்பிடத்தக்கது.

Tags :
|
|