- வீடு›
- பொழுதுபோக்கு›
- 68வது படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய்
68வது படத்தின் படப்பிடிப்புக்காக தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார் நடிகர் விஜய்
By: vaithegi Fri, 03 Nov 2023 11:24:54 AM
விஜய் நடிக்கும் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்கவுள்ளார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இதையடுத்து இதில் விஜய் 2 வேடங்களில் நடிப்பதாகக் கூறப்படுகிறது.
எனவே இதன் படப்பிடிப்பு கடந்த சில நாட்களுக்கு முன் தான் சென்னையில் பூஜையுடன் தொடங்கியது. இப்படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, சினேகா, லைலா, ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.இதற்கு முன்னதாக இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகளுக்காக விஜய், வெங்கட் பிரபு உள்ளிட்ட படக்குழு அமெரிக்கா சென்றிருந்தது.
இந்த நிலையில், நேற்று முன்தினம் (நவ.01) சென்னையில் ‘லியோ’ படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது.
இதனையடுத்து இன்று அதிகாலை ‘விஜய் 68’ படத்தின் படப்பிடிப்புப் பணிகளுக்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் தாய்லாந்து புறப்பட்டுச் சென்றார் விஜய். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் சில நாட்கள் நடக்க இருக்கும் படப்பிடிப்பில், படத்தின் ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட உள்ளதாகக் கூறப்படுகிறது.