Advertisement

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக இயக்குனரை பாராட்டிய நடிகர் விஜய்

By: Nagaraj Fri, 11 Aug 2023 8:50:08 PM

ஜெயிலர் படத்தின் வெற்றிக்காக இயக்குனரை பாராட்டிய நடிகர் விஜய்

சென்னை: ஜெயிலர் படம் பெற்ற வெற்றியை அடுத்து இயக்குனர் நெல்சனுக்கு நடிகர் விஜய் போன் செய்து பாராட்டியுள்ளார்.

நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘ஜெயிலர்’ திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, வசந்த் ரவி, விநாயகன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

do you know why,jailer vetri,vijay called nelson, ,ஏன் தெரியுமா, ஜெயிலர் வெற்றி, நெல்சனுக்கு போன் செய்த விஜய்

‘ஜெயிலர்’ படம் முதல் நாளில் தமிழகத்தில் ரூ.25 கோடியும், உலகம் முழுவதும் ரூ.90 கோடியும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், ‘ஜெயிலர்’ படத்தின் வரவேற்பை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் நெல்சனை போனில் அழைத்து வாழ்த்து தெரிவித்ததாக கூறப்படுகிறது.

‘ஜெயிலர்’ படத்தின் கதையை ரஜினியிடம் சொல்லுமாறு விஜய் கூறியதாக ‘ஜெயிலர்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நெல்சன் பேசியது குறிப்பிடத்தக்கது.

Tags :