Advertisement

நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை வழங்கிய நடிகர் விஜய்

By: Nagaraj Sat, 10 Dec 2022 10:02:32 PM

நடிகர் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட்டை வழங்கிய நடிகர் விஜய்

சென்னை: நடிகர் விஜய் யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார். இத்தகவலை ரசிகர்கள் செம வைரலாக்கி வருகின்றனர்.

தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருபவர் யோகிபாபு. இவர் இல்லாத படமே இல்லை என சொல்லும் அளவுக்கு தமிழில் ரிலீசாகும் பெரும்பாலான முன்னணி நடிகர்களின் படங்களில் யோகிபாபுவின் அசத்தல் காமெடி இருந்து வருகிறது.

இவர் காமெடியனாக மட்டுமின்றி கதையின் நாயகனாக நடிக்கும் படங்களுக்கும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அந்த வகையில் இவர் கதையின் நாயகனாக நடித்து கடந்த ஆண்டு வெளியான மண்டேலா படம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது

cricket,vijay,yogibabu,viral,netizens , கிரிக்கெட், யோகிபாபு, விஜய், வைரல், நெட்டிசன்கள்

அஸ்வின் இயக்கிய படத்தில் சலூன் கடை நடத்தி வருபவராக நடித்திருந்தார் யோகிபாபு. இப்படத்திற்கு சிறந்த வசனம் மற்றும் சிறந்த இயக்குனர் ஆகிய இரண்டு பிரிவுகளில் தேசிய விருதுகள் கிடைத்தன. பிசியாக நடித்து வரும் யோகிபாபு, கிரிக்கெட் மீது அதிக ஆர்வம் கொண்டவராக இருந்து வருகிறார். ஷூட்டிங்கில் ஓய்வு கிடைக்கும்போதெல்லாம் கிரிக்கெட் விளையாடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இவரின் கிரிக்கெட் திறமையை கவனித்து வந்துள்ள நடிகர் விஜய் தற்போது யோகிபாபுவுக்கு கிரிக்கெட் பேட் ஒன்றை சர்ப்ரைஸ் கிப்டாக அனுப்பி வைத்துள்ளார். அந்த பேட்டை கையில் பிடித்தவாரு எடுத்த புகைப்படத்தை தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த கிரிக்கெட் பேட்டை இன்ப அதிர்ச்சியாக கொடுத்த விஜய் அண்ணாவுக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், அந்த பேட்டில் விலையையும் தேடி பிடித்து அதனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். அதன்படி அந்த பேட்டின் விலை ரூ.10 ஆயிரம் என குறிப்பிடப்பட்டுள்ளது

Tags :
|
|