- வீடு›
- பொழுதுபோக்கு›
- தாய்லாந்தில் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்
தாய்லாந்தில் படப்பிடிப்பு முடித்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்
By: Nagaraj Wed, 15 Nov 2023 4:04:59 PM
சென்னை: படப்பிடிப்பு முடிந்து திரும்பினார்... தளபதி 68 படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பிய நடிகர் விஜய்யின் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் கடந்த மாதம் லியோ படம் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வசூலை குவித்தது. தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடந்து வருகிறது.
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக வெவ்வேறு ஜானரில் படங்களை இயக்கி வருகிறார் இயக்குனர் வெங்கட் பிரபு. அஜித்தை வைத்தும் 'மங்காத்தா' என்ற பிளாக் பஸ்டர் ஹிட்டை கொடுத்தார். சமீபத்தில் சிம்புவை மாநாடு படத்தில் கம்பேக் கொடுக்க வைத்து ஹிட் அடித்தார். இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ளது ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
இதன் படப்பிடிப்பு 'லியோ' ரிலீசுக்கு பின்பாக துவங்கி தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. கடந்த சில நாட்களாக இப்படத்தின் ஷுட்டிங் தாய்லாந்து நாட்டில் நடைபெற்றது.
படத்தின் முக்கியமான ஆக்ஷன் மற்றும் கார் சேஸிங் காட்சிகள் படமாக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது தாய்லாந்த் ஷெட்யூலை நிறைவு செய்து விட்டு, நடிகர் விஜய் தற்போது சென்னை திரும்பியுள்ளார்.
அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தொடர்ந்து, அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.