Advertisement

லியோ படத்தின் அறிமுக பாடலை பாடுகிறாராம் நடிகர் விஜய்

By: Nagaraj Thu, 08 June 2023 11:31:37 PM

லியோ படத்தின் அறிமுக பாடலை பாடுகிறாராம் நடிகர் விஜய்

சென்னை: லியோ படத்தில் நடிகர் விஜய் அறிமுக பாடலைப் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.
விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய்யுடன் லியோ படத்தில் இணைந்துள்ளார். இதில் த்ரிஷா, சஞ்சய் தத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

மிஷ்கின், சஞ்சய் தத், கௌதம் மேனன் ஆகியோர் காஷ்மீர் படப்பிடிப்பை முடித்துவிட்டதாக லோகேஷ் சமீபத்தில் கூறியிருந்தார். தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து வருகிறது.

leo,introductory song,actor vijay,revenue,sung,info ,லியோ, அறிமுக பாடல், நடிகர் விஜய், வருவாய், பாடியுள்ளார், தகவல்

மேலும், லியோவின் கேரள மாநில வெளியீட்டு விநியோக உரிமை ரூ.16 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு உரிமம் ரூ.60 கோடிக்கு விற்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

இப்படம் வெளியீட்டிற்கு முன்பே ஓடிடி, இசை உரிமம், விநியோக உரிமம் என ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், லியோவில் இடம்பெறும் அறிமுகப் பாடலை நடிகர் விஜய் பாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags :
|
|