- வீடு›
- பொழுதுபோக்கு›
- ‘தி ஈக்வலைஸர் 3’ படத்தில் வரும் காட்சி ஒன்றில் ‘ஃபேன் பாய்’ ஆக மாறிய நடிகர் விஜய்
‘தி ஈக்வலைஸர் 3’ படத்தில் வரும் காட்சி ஒன்றில் ‘ஃபேன் பாய்’ ஆக மாறிய நடிகர் விஜய்
By: vaithegi Sat, 02 Sept 2023 10:07:51 AM
‘லியோ’ படத்துக்குப் பிறகு விஜய் நடிக்கும் 68-வது திரைப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். ஒரு விஜய் ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகக் தகவல் கூறப்படுகிறது.
இதையடுத்து தற்போது வெங்கட் பிரபு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, நடிகர் விஜய் ஆகியோர் அமெரிக்கா சென்றுள்ளனர். தெற்கு கலிபோர்னியாவில் உள்ள கிரியேட்டிவ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனத்தில், விஜய்யின் தோற்றத்தை வித்தியாசப்படுத்த 3டி விஎஃப்எக்ஸ் (3D VFX) டெக்னாலஜியில் அவர் உடலை ஸ்கேன் செய்கின்றனர். எனவே அதன் மூலம் அவர்கள் நினைத்தபடி தோற்றத்தை உருவாக்க முடியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில், தற்போது அமெரிக்காவில் இருக்கும் விஜய், அங்கு உள்ள திரையரங்கம் ஒன்றில் டென்ஸல் வாஷிங்டன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘தி ஈக்வலைஸர் 3’ (The Equalizer 3) படத்தை முதல் நாள் முதல் காட்சி பார்த்துள்ளார்.
இதையடுத்து அதில் டென்ஸல் வாஷிங்டன் வரும் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் ‘ஃபேன் பாய்’ ஆக எழுந்து நின்று தன் கைகளை விரித்து கொண்டாடும் புகைப்படத்தை தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து உள்ளார். அதில் இந்த புகைப்படத்தை எடுத்தவர் இயக்குநர் வெங்கட் பிரபு என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பெரும் வைரலாகி கொண்டு வருகிறது.