Advertisement

மாணவர்களை வருகிற ஜூன் 17ம் தேதி சந்திக்கிறார் நடிகர் விஜய்

By: vaithegi Wed, 07 June 2023 2:07:01 PM

மாணவர்களை வருகிற  ஜூன் 17ம் தேதி சந்திக்கிறார் நடிகர் விஜய்

நடிகர் விஜய் தொடர்ந்து திரைப்படங்களில் பிஸியாக நடித்து வரும் சூழலில் அவர் விரைவில் அரசியல் கட்சி தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் கூறப்படுகிறது. இதன் முன்னோட்டமாக விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு அரசியல் நிகழ்வுகளை செய்து கொண்டு வருகிறது .

தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவித்தல் .நலத்திட்ட உதவிகள் என்று அரசியல் சார்புடைய பல்வேறு நிகழ்வுகளில் தங்களை ஈடுபடுத்தி வருகிறது. அந்த வகையில் நடிகர் விஜய் 12-ம் வகுப்பு பொது தேர்வு மற்றும் ப10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்களை சந்திக்க இருப்பதாக கடந்த மாதம் செய்திகள் உலா வந்தன.


vijay,vijay peoples movement ,விஜய்,விஜய் மக்கள் இயக்கம்

இதையடுத்து இதுகுறித்து அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம் பொதுச்செயலாளர் புஸ்ஸிஸி. N.ஆனந்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

"தளபதி விஜய்" அவர்களின் சொல்லுக்கிணங்க, வருகின்ற அன்று "அகில இந்திய தலைமை தளபதி விஜய் மக்கள் இயக்கம்" சார்பாக சென்னை, நீலாங்கரையில் உள்ள R.K Convention Centre-ல் 2023-ஆம் ஆண்டு நடந்து முடிந்த "10-ம் மற்றும் 12-ம்" வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ்நாடு முழுவதும் தொகுதி வாரியாக முதல் 3 இடங்களை பெற்ற மாணவ, மாணவிகளுக்கு "தளபதி விஜய்" மாணவ, மாணவிகளின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழ்கள் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரவப்படுத்தவுள்ளார் என்று அவர் அதில் தெரிவித்து உள்ளார்.

Tags :
|