Advertisement

தமிழகத்தில் வசூலில் பட்டையை கிளப்பும் நடிகர் விஜய்யின் லியோ படம்

By: Nagaraj Thu, 26 Oct 2023 4:14:44 PM

தமிழகத்தில் வசூலில் பட்டையை கிளப்பும் நடிகர் விஜய்யின் லியோ படம்

சென்னை: லியோ படத்தின் தமிழ்நாட்டு வசூல் அனைவரையும் வியக்க வைத்துள்ளது. வசூலில் புதிய சாதனை படைத்துள்ளது நடிகர் விஜய்யின் லியோ படம்.

விஜய்யின் லியோ திரைப்படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. பெரிதும் எதிர்பார்ப்பில் வெளியான லியோ படம் சற்று கலவையான விமர்சனங்களை சந்தித்து.

அப்படி இருந்த நிலையிலும் வசூலில் எந்த ஒரு குறையும் வைக்காமல் நாளுக்கு நாள் புதிய சாதனைகளை பாக்ஸ் ஆபிஸில் படைத்து வருகிறது.

tamil nadu,vasool vedati,leo film,aaru das,box office ,தமிழகம், வசூல் வேட்டை, லியோ படம், ஆறு நாட்கள், பாக்ஸ் ஆபீஸ்

படம் வெளிவந்து ஆறு நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை உலகளவில் ரூ. 435 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ள நிலையில் தமிழக வசூல் குறித்து விவரம் வெளியாகியுள்ளது.

அதன்படி தமிழ்நாட்டில் மட்டுமே ஆறு நாட்களில் ரூ. 150 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. சில இடங்களில் லியோ படத்திற்கு வசூல் சரிவு ஏற்பட்டாலும், தமிழ்நாட்டில் பட்டையை கிளப்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags :