- வீடு›
- பொழுதுபோக்கு›
- நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அடுத்த அட்டகாச அப்டேட்
நடிகர் விஜய்யின் லியோ படத்தின் அடுத்த அட்டகாச அப்டேட்
By: Nagaraj Mon, 12 June 2023 11:13:07 PM
சென்னை: நடிகர் விஜய் நடிக்கும் லியோ படத்தில் பாலிவுட் பிரபல நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
நடிகர் விஜய் தற்போது ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அக்டோபரில் திரையரங்குகளுக்கு வரவுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘லியோ’.
செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், சாண்டி மற்றும் மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இப்படம் வெளியீட்டிற்கு முன்பே இசை, வெளியீடு, ஓடிடி உரிமம் என ரூ.350 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘லியோ’ திரைப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் டென்சில் ஸ்மித் இணைந்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நடைபெற்று வரும் இப்படத்தின் படப்பிடிப்பில் இவர் நான்கு நாட்கள் கலந்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டென்சில் ஸ்மித் பாலிவுட் படங்கள் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டில் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் வெளியான ‘டெனட்’ திரைப்படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.